திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காட்டூர் பேருந்து நிறுத்த பகுதியில் லால்குடி காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை மறித்து சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் கிராவல் மண் கடத்தி வந்த நபர்கள் மணச்சநல்லூர் அருகே சணமங்கலத்தைச் சேர்ந்த விக்னேஷ் (24), லால்குடி அருகே தெரணி பாளையத்தைச் சேர்ந்த முருகேசன் (38), லால்குடி அருகே நெடுங்கூர் நடுத்தெருவை சேர்ந்த செல்வகுமார் மற்றும் ஆனந்தபாபு ஆகியோர் என தெரியவந்தது.
பின்னர் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த லால்குடி போலீசார் விக்னேஷ் மற்றும் முருகேசனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கிராவல் மண் கடத்தி வந்த இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் நான்கு யூனிட் கிராவல் மண்ணை போலீசார் பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments