அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறை மூலம் பொய் வழக்கு தொடர்ந்த திமுக அரசை கண்டித்து, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை பகுதியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புகார் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசாக திமுக அரசு உள்ளது.திமுகவின் ஏஜெண்டுகளாக காவல்துறை செயல்பட்டு வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். பொய் வழக்கு போட்ட விடியா திமுக அரசை, மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறோம்.- முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேச்சு. முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி,வளர்மதி, நல்லுசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments