Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழக வெற்றி கழக மாவட்ட தலைவர் கரிகாலன் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை நேற்று திருச்சி மரக்கடை பகுதியில் தொடங்கினார் அவர் காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை பகுதிக்கு வருவதற்கு சுமார் ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது

இந்நிலையில் ஏற்கனவே காவல்துறை விதித்த 23 நிபந்தனைகள் மற்றும் 10:30 மணியிலிருந்து 11 மணி வரை மட்டுமே அவர் பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது இவை அனைத்தும் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு தற்பொழுது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

3 cases {Cantonment PS – 1 (TNPPDL Act), Gandhi Market PS -1 (U/s 296 (b), 324 (5) BNS & Srirangam PS – 1 (TNOPPD Act)} were registered against TVK cadres.

Note:
Cantonment PS TNPPDL Act case

1.Karikalan, Dist./City President, TVK

2.Adithya Cholan, Advocate Wing, Chennai, TVK.

3.Imaya Tamilan, District (South) Advocate Wing, TVK.
4.Vigneshkumar, Dist. Sec. Advocate Wing, Trichy, TVK.

5.Thulasimani, District President, Women’s Wing, TVK


மற்றும் இரண்டு பேரை தேடி வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்ட உள்ளர் மிக முக்கியமாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

காவல்துறை விதித்த 23 நிபந்தனைகளை மீறி பொது சொத்து மற்றும் தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்தது, பரப்புரைக்கு விதித்த நிபந்தனை விதிமுறைகளை மீறியதால் 3காவல்நிலையங்களான கண்டோன்மென்ட், காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *