Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனை வாரம் தொடக்கம் — GPay மூலம் சீட்டு வழங்க ஊக்குவிப்பு

நமது மண்டலத்தில் இயங்கக்கூடிய பேருந்துகளில் பணமில்லா பரிவர்த்தனையில் மூலம் பயண சீட்டு வழங்கிட நிர்வாக இயக்குனர் ஒப்புதல் உடன் பொது மேலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி 01.11.2025 முதல் 07.11.2025 வரை பணம் இல்லா பரிவர்த்தனை வாரம் என்ற பேட்ஜ்சினை அனைத்து நடத்துனர்களும் அணிந்து பணமில்லா பரிவர்த்தனைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து Maximum GPAY Collection அடைய இதனை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேற்கண்ட பேட்ஜிசினை அலுவலர்கள், கிளை மேலாளர்கள், பொறியாளர்கள், முதலாள்கள், அலுவலக பணியாளர்கள், டிராபிக் பணியாளர்கள், வெளி போக்குவரத்து பணியாளர்கள், பாதுகாவலர்கள், பரிசோதகர்களும் மற்றும்  பேருந்து நிலையத்தில் பணிபுரியக்கூடிய அனத்து தரப்பினரும் என அனைவரும் அணிந்து (பேட்ச் shirt button னில் மாட்ட கூறவும்) கொண்டு பணம் இல்லா பரிவர்த்தனை செய்ய நடத்துனர்களை ஊக்குவித்து சிறப்பு பரிசுகளை அவ்வப்போது வழங்கி உற்சாகப்படுத்த தங்களை அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

நாளை முதல் நாள் என்பதால் அனைத்து கிளை மேலாளர்களும் Shedout வந்து நடத்துனர்களுக்கு அறிவுரை கூறி Gpay அதிக பயணசீட்டு கொடுக்க கேட்டு கொள்ளப்படுகிறது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *