திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கல்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் அபி என்கிற ஆபிரகாம் சார்லஸ் (37). இரண்டு பசு ஒரு காளை மாடு வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் அவரது வயல் பகுதியில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்ட 50 ஆயிரம் மதிக்கத்தக்க பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அப்பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய் கடித்ததில் வாயில் நுரை வந்து கீழே விழுந்துள்ளது. அதனை கண்ட மாட்டின் உரிமையாளர் அபி கால்நடை மருத்துவரை அணுகினார். பின்னர் கால்நடை மருத்துவர் பசு மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பசு உயிரிழந்தது. இதனால் கல்பாளையம் பகுதியில் கால்நடை வளர்ப்பு அச்சத்துடன் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கால்நடை வளர்ப்போர் கூறுகையில்…… மாவட்ட நிர்வாகமும் மற்றும் ஊராட்சி நிர்வாகமும் எங்களது கால்நடைகளும் எங்களது குழந்தைகளுக்கும் வெறிநாய் கடிப்பதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments