காவேரி மருத்துவமனை நடத்தும் திருச்சி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி

காவேரி மருத்துவமனை நடத்தும் திருச்சி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி

திருச்சி காவேரி மருத்துவமனை சார்பாக திருச்சி பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 26-ஆம் தேதி முதல் துவங்குகிறது. இப்போட்டிகள் 26,27, 28 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் அணி தொடர்நுழைவு கட்டணமாக 20000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். ஒரு அணி 3 போட்டிகளில் விளையாட வேண்டும் .வெள்ளை நிற தோலில்லான கிரிக்கெட் பந்தில் போட்டிகள் நடைபெறும்.

வெற்றி பெறும் அணிகள் பிளாட்டினம், கோல்டு, எலைட் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு  வெற்றி ,தோல்வி(ஆறு அணிகள்) களுக்கு விருதுகள் வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக சிறந்த இப்போட்டியின் தொடரின் சிறந்த  விளையாட்டு வீரருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது .மொத்தம் இப்போட்டியின் பரிசு தொகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு போட்டியில் பங்கேற்கும் அணி வீரர்களுக்கு உடைகள், உணவுகள், சிற்றுண்டிகள் போட்டிக்கான பந்து வழங்கப்படுமென கிரிக்கெட் போட்டியை நடத்தும் குழு அறிவித்துள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM