வழக்கில் இருந்து விடுதலை, 2018, மார்ச் 28, 29, 30, 31-மன்னார்குடியில் நடைப்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்தும், உத்தரவை நிறைவேற்ற கோரியும் டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டது.
அதன் அடிப்படையில் ஜீயபுரத்தில் நடைப்பெற்ற. ரயில் மறியல் போரட்டத்தில் கலந்து கொன்டமைக்காக என் மீதும் கட்சியின் மூத்த தோழர் பேரூர் ப. நடராஜன், அன்றைய.
அந்த நல்லூர் ஒன்றிய செயலாளர் தோழர் பேரூர் வீரமுத்து ஆகிய மூன்று பேர் மீதும் சேலம் ரயில்வே கோட்டம் மூலமாக கரூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 8 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று (18-03-2026) மாலை 6:30 மணிக்கு தீர்ப்பளித்த கரூர் முதன்மை நீதியரசர் அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்து மூவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
வழக்கு துவக்கப்பட்ட நாள் அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய கரூர் மாவட்ட செயலாளர் தோழர் நாட்ட ராயன், மற்றும் சில தோழர்கள் நீதிமன்றத்திற்க்கு வருகை தந்து வணக்கத்திற்க்கு குறிய வழக்கறிஞர் காந்திக் பெருமாள் அவர்கள வழக்கை நடத்துவதற்க்கு, அறிமுகபடுத்தினார்கள்.
வணக்கத்திற்க்குரிய வழக்கறிஞர் காந்திக் பெருமாள் அவர்களும் வழக்கு துவக்கப்பட்ட நாளில் இருந்து நேற்று தீர்ப்பு சொல்லும் நேரம் வரை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி திறமையாக வாதாடி தீர்ப்பை பெற்று தந்துள்ளார்.
கரூர் மாவட்ட தோழர்களுக்கும், வழக்கறிஞர் கார்த்திக் பெருமாள் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தோழனமயுடன், அயிலை சிவசூலியன், மாநில பொருளாளர்,
தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments