Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அரசு மருத்துவமனை கட்டிடங்கள் தங்கநிறத்தில் ஒளிர்வது ஏன்? மருத்துவர்கள் தகவல்

செப்டம்பர் மாதம் சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகும். குழந்தை பருவ புற்றுநோயை குறிக்கும் வண்ணமாக “தங்கத்தின்” நிறம் உள்ளது. மேலும் புற்றுநோய் என்கிற கொடிய நோயை எதிர்த்து போராடும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த தங்க ரிப்பன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வலிமை, தைரியம் மற்றும் பின்னடைவு ஆகியவற்றை குறிக்கும் வகையில் இந்த வண்ணம் உள்ளது.

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “Children with Cancer should Survive & Thrive” என்பதாகும். இந்தியாவில் குழந்தை பருவ புற்றுநோயை சுகாதார முன்னுரிமையாக அங்கீகரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அதனை தொடக்கத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதும் இதன் நோக்கமாகும். திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கட்டிடங்கள் இரவில் தங்க நிறத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *