Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

காதலர் தினத்தை இப்படியும் கொண்டாடலாம்! சூரியன் எஃப் எம் வழங்கும் “ஆறா காதல்”.

இன்றைய நாளில், உலக மக்கள் அனைவராலும் கடைபிடிக்கப்படும் ஒருசில தினங்களில் பிரதான இடம் பிடிப்பது காதலர் தினம். உலகெங்கிலும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. மறைத்து வைக்கப்பட்ட அன்பை பரிமாற்றம் செய்துக்கொள்ள சிறந்த நாளாக உலக மக்களால் கொண்டாடப்படுவதே காதலர் தினம் 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கொண்டாடி வரும் இந்நாளில் இப்படியும் காதலர் தினத்தை கொண்டாடலாம் என்கிறது திருச்சி சூரியன் எஃப் எம் வழங்கும் ஆறா காதல் நிகழ்ச்சி!!. நம் நகரில் ம(றை)றக்கப்பட்ட நதிகள் குறித்து ஒரு விழிப்புணர்வுக்கான புது முயற்சியை கையாண்டு இருக்கிறது சூரியன் எப்எம் பண்பலை.

ஏன் ஆறுகள் மீது இந்த தீரா காதல்..

மனித நாகரிகம் என்பது நதிகளை சார்ந்தே அமைந்தது. நதிகளின் ஓரம் தங்குமிடங்கள் அமைத்து மனிதன் வாழ ஆரம்பித்தான். அது தான் பின்னர் கிராமம் – நகரம் என்று உருவெடுத்தது. எனவே நதிகள் என்பது நாகரிகத்தின் கட்டுமானத் தொகுதிகள். இன்று, ஏறக்குறைய எல்லா நாட்டிலும் உள்ள ஆறுகள் பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. மேலும் அவை மாசுபாடு மற்றும் குறைந்த நீர் மட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. 

உலகெங்கிலும் உள்ள மக்களை தங்களைச் சுற்றியுள்ள நதிகளைக் கொண்டாடவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான திட்டங்களைத் தொடங்க உதவவும் ஒரு புது முயற்சி தான் இந்த ஆறா காதல் நிகழ்ச்சி!. தமிழகத்தில் கிட்டத்தட்ட 10 மாவட்டங்களில் சூரியன் எப்எம் சார்பில் மாவட்டங்களின் மிகவும் பழமையான நதிக்கரைகளில் சமூக ஆர்வலர்கள் சூரியன் எஃப்எம் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆறுகளை பாதுகாப்போம் என்று உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அது மட்டுமின்றி இந்த வாரம் முழுவதும் ஆறுகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி‌‌ சூரியன் எஃப் எம்-இல் ஒலிபரப்பப்படும். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக திருச்சியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த உய்யகொண்டான் கால்வாய் கரையில்    ‌ ஆறுகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சூரியன் எப்எம் தொகுப்பாளர்கள், ஊழியர்கள், ஷைன் திருச்சி மனோஜ் தர்மர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், திருச்சி ஷாம் மற்றும் நீர் ஆர்வலர்கள், பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நம்மை சுற்றி ஓடும் ஆறுகளை பாதுகாப்போம் இயற்கையை நேசிப்போம்! சூரியன் எஃப்எம் உடன் இணைந்து ஆறா காதலை கொண்டாடுவோம்!

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *