ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பாபு (45) மேலூர் ரோட்டில் பிரபல தனியார் பள்ளி வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இன்று இரவு 8 மணி அளவில் தனது குடியிருப்பு வளாகத்தின் வெளியே
நடைபயிற்சியின் போது, இங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் பாபுவை எட்டி உதைத்ததில் நிலைதடுமாறிய ரோட்டில் விழுந்தார். அப்போது அவர் கையில் வைத்திருந்த சமீபத்தில் வாங்கி 25 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போனை பிடிங்கி கொண்டு காவிரி ஆறு கரையோரம் தப்பி சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பிறகு அங்குவந்த ஸ்ரீரங்கம் போலீஸ்சார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்து க்ரைம் போலீஸில் புகார் கொடுக்க சொல்லிவிட்டு சென்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments