திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.10,44,800/-மதிப்புள்ள 60 செல்போன்களை மீட்டு, அதன் உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள்.
தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் .ந.காமினி அவர்கள், பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில்
வாரம்தோறும் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி இன்று 06.08.2025-ந்தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து பொதுமக்கள் கொடுத்த 35 மனுக்களை பெற்று, சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய தீர்வு காண அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் காணாமல் போன செல்போன்களை விரைந்து கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். அதன்படி, பொதுமக்கள் கொடுத்த புகாரின்படி, கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காணாமல் போன செல்போன்கள் பற்றிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்ததில் மொத்தம் 60 ஆன்டிராய்டு செல்போன்கள் (மதிப்பு சுமார் ரூ.10,44,800/-) கண்டுபிடிக்கப்பட்டு
மீட்கப்பட்டது. இன்று 06.08.2025-ந்தேதி திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்திற்கு நேரில் வந்த 47 செல்போன்களின் உரிமையாளர்களிடம் காவல் ஆணையர் ந.காமினி அவர்கள் ஒப்படைத்தார்கள். இந்நிகழ்வின்போது காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தார்கள்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ.10,44,800/-மதிப்புள்ள செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

Comments