திருச்சியில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தங்க நகை மதிப்பீட்டாளர் (Gold Appraiser) பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்ட அண்ணா கல்வி நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் இப்பயிற்சிக்கு 8-ஆம் வகுப்பு படித்த (தேர்ச்சி அல்லது தோல்வி) யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு கிடையாது என்பதால் ஆண், பெண் இருபாலரும் இதில் பங்கேற்கலாம்.
இந்தப் பயிற்சி வரும் ஜனவரி 11, 2026 முதல் திருச்சியில் உள்ள ஜெசி மேல்நிலைப்பள்ளியில் (புத்தூர் ஹை-ரோடு) வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஒரு மாத காலத்திற்கு
நடைபெறும். இதற்கான மொத்தக் கட்டணம் ₹7,300/- ஆகும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்

வழங்கப்படும், இது வங்கிகள் மற்றும் நகைக்கடைகளில் வேலைவாய்ப்பு பெற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆர்வம் உள்ளவர்கள் 97156 28213 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments