கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, உறையூர் பருத்தி சேலை உள்பட 5 கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத் தரப்படும் என அறிவித்தார். தொடர் முயற்சிகளின் விளைவாக, உறையூர் பருத்தி சேலைகளுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஏற்கெனவே 10 கைத்தறி துணிகளுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள நிலையில் தற்போது 11-ஆவதாக உறையூர் பருத்தி சேலைக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளது.
புவிசார் குறியீடு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இல்லாதது, குறைந்த கூலி போன்ற காரணங்களால் இளைய தலைமுறையினர் தொழிலை விட்டு விலகியதால், உறையூர் கைத்தறி நெசவுத் தொழில் நலிவடைந்து வரும் நிலையில், புவிசார் குறியீடு கிடைத்துள்ளதன் காரணமாக, இத்தொழிலை மீட்டெடுக்க முடியும். வெளியேறிய இளம்தலைமு றையினரும் மீண்டும் இத்தொழிலில் ஈடுபடுவர் என்றனர்.
பல்வேறு நெசவாளர் கூட்டுறவு சங்கம், பைத்தம்பாறை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், தா.பேட்டையில் உள்ள மாரியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கைத்தறிகளின் வழியே உறையூர் பருத்தி சேலைகளை தயாரித்து வருகின்றனர். இத்தொழிலில் நேரடியாக 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் ஈடுப்பட்டுள்ளனர்.
திருச்சி உறையூர் பகுதியில் சோழ மன்னர்கள், நாயக்கர்க ளின் ஆட்சிக் காலத்தில் சாதாரண பருத்தித்துணிகள் கைத்தறி நெசவால் உற்பத்தி செய்யப்பட் டுள்ளன. சிலப்பதிகார பாடல்களிலும் உறையூர் பருத்தி சேலைகள் குறித்து இடம்பெற்றுள்ள து-இரண்டாம் உலகப் போரில் காயமடைந்தவர்களுக்கு பயன்படுத்தப்படும் பேண்ட் எய்டு துணிகள். ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த திருச்சி உறையூர் பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்பட்டன.
இங்கு 1854-ஆம் ஆண்டு முதல் தனித்துவமான பருத்தி சேலைகள் 50 அங்குல அகலத்துடன் 6, 7, 8, 9 கஜ அள வுகளில் தூய பருத்தி நூல் கொண்டு, கைத்தறி நெசவால் தற்போதும் பழைமை மாறாமல் தயாரிக்கப்படுகின்றன.
உறையூர் பருத்தி சேலைகள் உடுத்துவதற்கு இலகுவாகவும், காற்றோட்டமுள்ளதாகவும் தர மாகத் தயாரிக்கப்பட்டு, ரூ. 300 முதல் ரூ. 1,200 வரை விற் கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் கூட்டுறவு சங் கங்கள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனாலும், இந்தச் சேலைகளுக்கு விண்ணப்பித்து நீண்ட நாள்களாகியும் புவிசார் குறியீடு வழங்கப்படாமல் இருந்தது.
புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் விற்பனை அதிகரித்து தொழிலாளர்களின் கூலி 10 சதவீதம் வரை உயரும் என்றனர்.
புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் மீண்டும் உறையூர் பருத்தி சேலைக்கு வரவேற்பு பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து உறையூர் நூல் சேலையை நூற்றாண்டுகளுக்கு பழமை மாறதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்களின் எண்ணமாக உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments