திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த (12-09-2021) அன்று நடைபெற்ற கொரோனா – 19 சிறப்பு மெகா தடுப்பூசி முகாமில் சிறப்பாகப் பணியாற்றி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற முசிறி, மண்ணச்சநல்லுர், மருங்காபுரி
வட்டாரங்களுக்கும்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் பொன்மலை கோட்டத்திற்கும், மேலும் மாவட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றி அதிக பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்திய 6 தடுப்பூசி மையக் குழுக்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு பாராட்டுச் சான்றிதழ் மற்றும்கேடயமும் நேற்று (17.09.2021) வழங்கினார்.
இந்நிகழ்வில் துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) டாக்டர்.ஆ.சுப்ரமணி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதல்வர், இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) டாக்டர்.லட்சுமி மற்றும் வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments