Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் மாற்றம்: தொலைதூர பணியிடம் காரணமாக பொதுமக்கள் கவலை

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லுார், மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, இலால்குடி, புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை மற்றும் உப்பிலியபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்த ஊராட்சி செயலாளர்கள் தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளை செய்ய தவறியதன் காரணமாக, தற்காலிக பணிநீக்கம் செய்து உத்திரவிடப்பட்டிருந்தது.

தற்போது, தற்காலிக பணிநீக்கத்தினை விலக்கிக்கொண்டதனடிப்படையில், ஊராட்சி செயலாளர்களுக்கு மீளப்பணியிடம் வழங்கியும், நிர்வாக காரணங்களால் ஒன்றிய அளவில் பணிமாறுதல் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே முப்பது நாளைக்கு மேல் ஊராட்சி செயலர்கள் பணிக்கு வராததனால், கிராமங்களில் பல வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல இடங்களில் தெருவிளக்கு, குடிநீர் போன்ற பிரச்சனைகள் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இவர்கள் பணியில் இருந்திருந்தால் இவை அனைத்தும் உடனடியாக செய்யப்பட்டு இருக்கும்.

பஞ்சாயத்து செயலர்கள் ஊரின் ரத்த நாடி போன்றவர்கள். இவர்கள் இல்லை என்றால் ஊரில் எந்த ஒரு செயலும் நடக்காது. மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்பவர்களும் பஞ்சாயத்து செயலர்களே.

தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம், போன்ற அடிப்படை வசதிகள் தங்கு தடை என்று கிடைக்க, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் இவர்களின் உடனடி தலையீடு அவசியமாகிறது.

அரசாங்கத்தில் நடக்கும் எந்த ஒரு விழாக்களும் இவர்கள் இல்லாமல் நடக்காது. தேர்தல் நேரத்தில் இங்கனம் இவர்களை மாற்றுவது சரியாக இருக்காது. சாமானிய மக்கள் தான் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாவார்கள்.

தற்போதைய ஒன்றிய அளவிலான மாற்றத்தில் பஞ்சாயத்து செயலர்கள் அனைவரும் தினமும் பயணத்தில் குறைந்தபட்சம் 4 மணி நேரம் செலவழிக்க வேண்டி இருக்கும். அவர்கள் இருப்பிடத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 கிலோ மீட்டர் பயணிக்கு வேண்டி உள்ளது.

சான்றாக, பஞ்சாயத்து செயலர் சேகர், கொடியாலம் அந்தநல்லுார் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து பொய்கைபட்டி, மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

சேகர் வசிப்பதோ எலமனூரில் இங்கிருந்து இவர் பொய்கைபட்டி செல்ல வேண்டுமானால் 60 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். தினமும் போய் வர நாலு மணி நேரம். மேலும் இவர் ஒரு இருதய நோயாளி, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளார். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஒரு சில ஆண்டுகளே உள்ளன. இப்படி இருக்கையில் இவர் எங்கனம் வேலை செய்வார்? என்ன வேலை செய்வார் என்பது தான் பொதுமக்களின் கேள்வி?

ஆகவே ஊராட்சி செயலாளர்கள் தவறு செய்திருந்தாலும், தயவு செய்து மக்களின் நலன் கருதி அவர்களை ஏற்கனவே வேலை செய்த பணியிடத்தில் தொடர்வதற்கோ, அப்படி இல்லை என்றால், தயவு செய்து அவர்களை ஊராட்சி ஒன்றியத்திற்குள்ளேயே மாற்ற வேண்டும்.

அதாவது, இரண்டு சக்கர வாகனத்தில் சென்று வருவது போல 10-15 கிலோமீட்டர் தூரத்தில் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து அவர்களுக்கு பணி வழங்கினால் மக்களுக்கு தங்கு தடை இன்றி அவர்கள் சேவை செய்ய முடியம் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *