திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நீள் நெடுங்கண் நாயகி அம்மன் சமேத நீலிவனேஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். திருமண தடை நீக்கும் இந்த திருத்தலத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் சிவபெருமான் மற்றும் உமையம்மை பல்வேறு வாகனங்களில் எருந்துருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாலை 02:00 மணி அளவில் துவங்கி நடைபெற்றது. நமச்சிவாயா என்கிற நாமம் முழங்க பக்தர்கள் திருத் தேரை உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு ரத வீதியில் தேர் வந்து கொண்டிருந்தபோது சோலார் லைட்டில் எதிர்பாராத விதமாக தேர் சிக்கியது க்ஷ. சுமார் அரை மணி நேரம் தேரை திசை மாற்றுவதற்கு போராடி வந்தனர்.

இந்த நிலையில் இளைஞர் ஒருவர் அசாத்தியமாக சக்கரத்தில் ஏறி கம்பத்தை வளைத்து பிடித்து நகர்த்தினார். இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்ட இளைஞருக்கு பாரட்டுக்களை தெரிவித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments