திருச்சி மாவட்டம் மணப்பாறையில் எம்.ஜி.ஆர் 105-வது பிறந்தநாள் மற்றும் ஜெயலலைதா 74-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக நகர கழகம், ஸ்ரீவேப்பிலை சாயிபாபா கோயில் குழுவினர் மற்றும் இளைநிலா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பெஸ்டோ நகர் மைதானத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வடமாட்டிற்கு வேட்டி, மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழா தொடங்கியது.

களத்தில் இறங்கிய 12 காளைகளை 108 வீரர்களில், மாடு ஒன்றிற்கு 9 வீரர்கள் வீதம் கொடுக்கப்பட்ட 25 நிமிடங்களில் அடக்கினர். வடத்தில் இணைக்கப்பட்டுள்ள காளைகள் வீரர்களை களத்தில் வீரர்களை கலங்கடித்து விளையாடி வருகிறது. இதில் தலா ஒரு மாடு வீதம், வீரர்களின் கைகளில் சிக்காமல் வெற்றி பெற்ற காளைக்கும் அல்லது களங்கடித்த காளையை அடக்கிய வீரர்களின் அணிக்கும் என ரூ.6 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பார்வையாளர்களாக அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.சந்திரசேகர், செ.சின்னச்சாமி, நகர் மன்ற தலைவர் சுதா பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியினை காண சுற்றுவட்டார பகுதியினை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்திருந்தனர்.

இந்நிலையில் வடத்தில் இணைக்கப்பட்டு விளையாடிக்கொண்டிருந்த மாடு வீரர் சிங்கம்புணரி விளிம்பினிக்களத்தை சேர்ந்த பாண்டிகுமார் என்பவரை தூக்கி வீசியபோது, பாண்டிக்குமார் வயிற்று பகுதியில் கொடுங்காயமடைந்து சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். போட்டியில் 12 வீரர்கள், மாட்டின் உரிமையாளர் இருவர் என மொத்தம் 14 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.co/nepIqeLanO






Comments