கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதிகள் இணைந்து மாபெரும் இருபாலர் கால்பந்து போட்டி நடைபெற்றது. ஆண்கள் கால்பந்து போட்டியினை திருச்சி மக்களவை உறுப்பினர் துரைவைகோவும், பெண்கள் கால்பந்து போட்டியினை சென்னை மேயர் பிரியாராஜன் தொடங்கிவைத்து விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துகளை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், அமைச்சர் பொய்யாமொழி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், துணை மேயர் திவ்யா, பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இந்நிகழ்ச்சியில் பேசிய துரை வைகோ…. 60 ஆண்டு கால தலைப்புச் செய்தியாக வாழ்ந்தவர் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர். அவரைப் பற்றி இன்றைய தலைமுறை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். வைகோ 1978ல் ராஜ்யசபா செல்வதற்கு காரணமாக இருந்தவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தாத்தா அன்பில் தர்மலிங்கம். தற்போது நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு காரணம் அவரது பேரன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தான் என்றார். விளையாட்டு என்பது இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று என்றும், ஆரோக்கியமான விளையாட்டு முக்கியம் என்றும் கூறினார்.

இதனை அடுத்து பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா… ஒவ்வொரு நிகழ்விலும் பெண்களுக்கு முக்கியத்துவம் சம வாய்ப்பு அளிக்கப்படுவதற்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று கூறினார். மேலும் விளையாட்டு என்பது கல்வியை போல் முக்கியமான ஒன்று எனக் கூறிய அவர், விளையாட்டு உடல் மற்றும் மனதை உறுதிப்படுத்தும் எனக் கூறினார்.

இறுதியாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…. அன்பு சகோதரர் துரை வைகோ நாடாளுமன்றம் என்ற ஆடுகளத்திற்கு சென்றுள்ளீர்கள். அங்கு உங்களுடைய கேப்டன் நமது முதலமைச்சர் மு க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போட்டியில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் நாடாளுமன்றத்தில் உங்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கும் அது திருச்சியின் குரலாக ஓங்கி ஒலித்து திருச்சிக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பேசினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 09 June, 2024
 09 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments