பெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி அபார வெற்றி 

பெங்களூரு அணியை திணற விட்ட ஜடேஜா - சிஸ்கே அணி அபார வெற்றி 

ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டியின் 19- வது நாளின் முதலாவது ஆட்டம் நேற்று  மும்பையில் நடைபெற்றது.  இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் 10 ஒவர்களுக்கு நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். டு பிளேசி அரை சதம் அடித்து வெளியேறினார். பிறகு வந்த ரெயினா மற்றும் ராயுடு தலா 24,14 ரண்களுடன் வெளியேறினர். இன்றைய போட்டியில் அதிரடி காட்டிய ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து அசத்தினார். கடைசி ஓவரில் 5 சிக்ஸர் அடித்த ஜடேஜா 37 ரன்களை இறுதியில் சேர்த்து கொடுத்தார். 

பெங்களூரு அணியின் பந்து வீச்சாளரான ஹார்ஷல் படேல் 4 ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

மொத்தமாக 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 

192 ரன்கள் என்ற இலக்கொடு களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் கோஹ்லி 8 ரங்களில் வெளியேற, அவருடன்  களமிறங்கிய படிக்கல் 15 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். அதற்கு அடுத்த அதிகபட்சமாக மாக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டக்காரர்கள் சொற்ப ரண்களுக்கு வெளியேற 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி. 69 ரன்கள் வித்ியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது சென்னை அணி. 

சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 ஓவர்களில் ஒரு மெய்டன் ஓவருடன் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


ரவீந்திர ஜடேஜா- வின் சிறப்பான பேட்டிங் - ம் பந்துவீச்சும்  சென்னை அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.  

இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி சந்திக்கும் முதல் தோல்வி இதுவே ஆகும்.