திருச்சி மாவட்ட மத்திய நூலகம், வாசகர் வட்டம் மற்றும் திருச்சி சதுரங்க சங்கம் இணைந்து, வரும் ஞாயிற்றுக்கிழமை [24-08-2025] அன்று, திருச்சி மத்திய மாவட்ட நூலக வளாகத்தில் சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியின் நோக்கம் மாணவர்கள் மத்தியில் சதுரங்கத்தை ஊக்குவித்து, ஒழுக்கம், ஒருமைத்தனம் மற்றும் யோசனை திறனை மேம்படுத்துவதாகும். சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என தனித்தனி பிரிவுகளுடன், மூன்று பிரிவுகளில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக,
அல்ஹாஜ். எம்.ஏ. பீர் முகமது, தலைவர் – திருச்சி சதுரங்க சங்கம்
திருமதி. அல்லிராணி பாலாஜி, தலைவர் – வாசகர் வட்டம்
திரு. ஆர். சரவணகுமார், மாவட்ட நூலக அலுவலர்
பங்கேற்கின்றனர்.
அனைத்து போட்டியாளர்களுக்கும் சாதனைச் சான்றிதழ் மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மேலும், திருச்சி மத்திய மாவட்ட நூலகம் சார்பில் மாதம் இரண்டு முறை சிறப்பு சதுரங்க பயிற்சி வகுப்புகள் முன்னணி பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, மாணவர்களின் திறமையை வளர்த்து, அறிவுத்திறன் மற்றும் படைப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments