சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கருத்திற்கு எதிராக கூச்சலிட்ட திமுகவினரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சியினர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
 இதன் ஒரு பகுதியாக உறையூர் நாச்சியார் கோவில் பேருந்து நிலையம் அருகில் புதிய தமிழகம் கட்சியினர் 20 பேர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் படத்தை வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென முதலமைச்சர் படத்தை எரித்தனர். இதுப்பற்றி தகவலறிந்து வந்த உறையூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

 மேலும் புதிய தமிழகம் கட்சி மாநகர் மாவட்ட தலைவர் சண்முகம், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் வாழையூர் குணா உள்ளிட்ட 8 பேர் மீது 3 பிரிவின் கீழ் உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன் அனுமதியின்றி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் படத்தை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO

 26 Oct, 2025
26 Oct, 2025                           140
140                           
 
 29 April, 2022
 29 April, 2022

Comments