Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்த முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று (15. 06.2025 )தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் கல்லணையிலிருந்து காவேரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குருவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார்

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனங்களுக்காக (12.06.2025)அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்தது தொடர்ந்து கல்லணையில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவேரி வெண்ணாரு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் திறந்து விடப்பட்டது. தற்போது உப ஆறுகளிலும் விவசாய பணிகள் தொடங்கப்பட்டு வருகிறது.

கல்லணையில் காவேரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் வெண்ணாறு ஆற்றிலிருந்து வினாடிக்கு 1500 கன அடி நீர் கல்லணை கால்வாயில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் கல்லணையில் தற்பொழுது நீர் திறந்து விடப்படுவதால் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் குருவை சாகுபடி செய்யவும் சம்பா சாகுபடிக்காகவும் தொடங்கப்படக் பணிகள் செய்யவும் சுமார் 13.0 லட்சம் ஏக்கர் பரப்பு பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.

 முதலமைச்சர் அவர்கள் கல்லணை சுற்றுலா மாளிகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்  பிரியங்கா பங்கஜம் திருவாரூர் மாவட்ட ஆட்சி தலைவர் மோகனச்சந்திரன் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மயிலாடுதுறை ஆட்சி தலைவர் ஸ்ரீகாந்த் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆய்வு நடத்திய போது டெல்டா பகுதியில் தூர்வாரவப்பட்டதன் விவரம் குறித்தும் சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டடைந்தார்.

மேலும் தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்திடும் விவசாய இடுப்பொருட்கள் ஆன உரங்கள் விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்திடவும் அறிவுறுத்தினார்.விவசாய சங்க பிரதிநிதிகள் முதலமைச்சரை சந்தித்து மேட்டூர் மற்றும் கல்லணையில் இருந்து சாகுபடி குறித்த காலத்தில்  தண்ணீரை திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு தங்கள் கோரிக்கைகளையும் மனுவாக அளித்தனர்.

 இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிற்படுத்தோர் நலத்துறை அமைச்சர் மெய்யப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி ஆர் பாலு,கல்யாணசுந்தரம், எஸ் முரசொலி, தில்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், சட்டமன்ற

நீர்வள துறை அரசு செயலாளர்  ஜெயகாந்தன், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் தலைமை பொறியாளர் ரமேஷ் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *