தமிழ்நாடு வெல்லட்டும் ஸ்டாலின் தொடரட்டும் என்ற மாநில மாநாடு சிறுகனூரில் நடைபெற உள்ளது, மாநாட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான நேரு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
தலைவர் சொல்லியது போல 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் மிகப்பெரிய மாநாடாக அமைய உள்ளது, 20 லட்சம் சதுர அடி அளவில் அரங்குகள் அமைக்கப்பட்டு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு, ஏழு லட்சம் பேர் நின்று பார்க்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மாநாட்டு பந்தலின் இருபுறமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.தள்ளு முள்ளு இல்லாமல் தொண்டர்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டது.
3 மணி அளவில் மாநாடு தொடங்கப்படும் தலைவர் வரும்போது கொடியேற்றப்பட்டு தொண்டர்களின் வரவேற்பு பெற்று மேடைக்கு செல்ல உள்ளார். இந்த மாநாட்டிற்கு 24 ஆயிரம் வாகனங்கள் வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவ்வாறு வரும் வாகனங்கள் மாநாட்டின் இருபுறமும் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேனிசைத் தென்றல் தேவா மற்றும் அப்துல் குத்தூஸ் அவர்களின் இன்னிசை கச்சேரியும் நடைபெற உள்ளது, மாலை ஐந்து முப்பது மணிக்கு தலைவர் அவர்கள் வந்து கொடியேற்றி விட்டு பின்னர் நான்குரை மணி நேரத்துக்குள் மாநாடு முடிந்துவிடும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் இங்கு அளித்த கல்வி, பாசனம், மருத்துவம் வசதிகள் வழங்குவோம் என்ற 7 வாக்குறுதிகள் எந்த அளவிற்கு முடிவடைந்துள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள் அதுபோல தற்போது வாக்குறுதிகள் மற்றும் தலைவர் பேசும்போது அறிவிப்புகள் வழங்குவார்.என்ன செய்ய முடியும் என்பதனை அறிந்து அதன்படி அறிவிப்புகளை வெளியிடுவார்மாநாட்டை ஒட்டி போக்குவரத்து மாற்றம் மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளை காவல்துறையினர் சிறப்பாக மேற்கொள்வார்கள், கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார்.
பேட்டியின் நிறைவாக நான் இவ்வளவு சொல்லி இருக்கேன் எனக்கு ஏதாவது சொல்லுங்க என்றும், எங்களுக்கு நல்ல செய்தி ஏதும் நீங்கள் சொல்ல மாட்டீர்கள் என்று செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பினார்.
தேர்தல் முடியுறவரைக்கும் நீங்க எல்லாரும் கொஞ்சம் ஒத்துழைப்பு குடுங்க, ஏதாவது போட்டு அடிச்சு விடாதீங்க என சிரித்தவாறு செய்தியாளர்களை கேட்டுக் கொண்டார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments