திருச்சியில் செவிலியர்களுக்கு சிலம்பப் பயிற்சி - தொடக்க விழா!!

திருச்சியில் செவிலியர்களுக்கு சிலம்பப் பயிற்சி - தொடக்க விழா!!

திருச்சியில் செவிலியர்களுக்கு சிலம்பப் பயிற்சி - தொடக்க விழா!!திருச்சியில் செவிலியர்களுக்கு சிலம்பப் பயிற்சி - தொடக்க விழா!!யிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

தமிழர் மரபுக் கலைகள் குறித்தும், நிகழ்த்து முறைகள் குறித்தும், நிகழ்த்து முறைகளில் உள்ள உடலியல், உளவியல், அறிவியல், இயற்கை அறிவியல், சமூகக்கட்டமைப்பு , பண்பாடு, இனம், மொழி, நிலம் நோயற்ற தலைமுறைகளை வளர்த்தெடுக்கும் மாண்புகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும் சிலம்பக் கலைகளை பெண்கள் , வளரிளம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் எனவும், காலத்தின் தேவை தனி மனித வாழ்க்கைக்கும், சமூக வாழ்வியலை எதிர்கொள்ளவும் , பெண்களுக்கு எதிரான வன் குற்றங்களைத் தடுக்கவும் மரபு சார் தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் ஆண்கள் பாலின சமத்துவத்துடன் பெண்களை நடத்த வேண்டும் எனவும் கலைகள் தனி மனித ஒழுக்கம், சமத்துவம், சமூக பொறுப்பு , ஆகிய பண்புகளா வளர்த்தெடுக்கும் மகத்தான ஆயுதம் என செவிலியர்களுக்கு சிறப்புரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மருத்துவ மனையின் தலைமை மருத்துவர்கள் ரமேஷ் மீனாகுமாரி
தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு இணைச் செயலரும் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியருமான கி.சதீஷ் குமார், சிலம்பம் பாசறையின் இயக்குநர் சிலம்பம் கார்த்திக் பயிற்றுநர்கள் மகேந்திரன், சந்தியா உள்ளிட்ட மாணவர்கள் சிலம்பம் நிகழ்த்தி வகுப்புகளை தொடங்கினர்.

Advertisement

இந்த பயிற்சியில் 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.