இளங்கனல் தொண்டு நிறுவனம், தமிழன் சிலம்பம் பயிற்சி பாசறை இணைந்து ஜூ 12 குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரணி மற்றும் விழிப்புணர்வு கூட்டத்தினை இன்று 12.06.2022 திருச்சி மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகே பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இச்சிறப்பு நிகழ்வினை திருச்சி கன்டோன்மென்ட் பகுதி சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையேற்று துவக்கி வைத்தார். வழக்கறிஞர் மணி வண்ண பாரதி முன்னிலை வகித்தார்.
கலைக் காவிரி நுண்கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர். சதீஷ் குமார் தண்ணீர் அமைப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அனைவரையும் வரவேற்று குழந்தை தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து தொண்டு நிறுவனத்தின் பொருளாளர் ஜோ. அற்புத சகாயராஜ் உரையாற்றினார். தமிழன் சிலம்பம் பயிற்சி பாசறை மாணவ, மாணவிகள் தங்களின் தனித்திறமைகள் சிலம்பாட்டம் மூலமாகவும், பதாகைகள் வார்த்தைகள் அடங்கிய முழக்கங்கள் செய்து விழிப்புணர்வு வழங்கினர்.
மேலும் பொதுமக்களுக்கு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இளங்கனல் தொண்டு நிறுவனத்தின் தலைவர் க. ரஞ்சித் குமார் அனைவருக்கும் நன்றி கூறினார். இந்நிகழ்வில் பெற்றோர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை கார்த்திக் மாஸ்டர், இளங்கனல் இணைச்செயலர் அ. அந்தோணி ஜெய்கர் ஒருங்கிணைத்தனர். இறுதியாக மாணவ மாணவிகள் உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments