திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஜங்கமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத ஜானகி என்பவருக்கு பிறந்த 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த செப்டம்பர் 23 ம் தேதி விற்பனை செய்துள்ளார்.
ஆனால் குழந்தையை கடத்திச் சென்றதாக நாடகமாடிய குழந்தையின் தாய் ஜானகி, அவரது வழக்கறிஞர் பிரபு, இவரது இரண்டாவது மனைவி சண்முகவள்ளி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கவிதா ஆகிய 4 பேரை லால்குடி போலீஸார் ஜனவரி 8 ம் தேதி கைது செய்தனர்.
மேலும் லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையிலான தனிப்படை போலீஸார், குழந்தையை கர்நாடகா மாநிலம் வெள்ளகாரா பகுதியில் உள்ள ஒரு தம்பதியிடமிருந்து குழந்தையை மீட்டுனர். பின்னர் தனிப்படை போலீசார் கர்நாடகாவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தனர்.
அதற்குப் பிறகு தமிழ்நாடு உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் ஒப்படைக்கப்படும் என லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments