நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் முசிறி பிரிவு சாலையில் துவங்கிய இந்த பேரணியானது பேருந்து நிலையம் திருச்சி சாலை பாலக்கரை ஆத்தூர் ரோடு வழியாக பள்ளி வளாகம் வரை நடைபெற்றது இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.

பேரணியில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் அண்டை வீட்டாருடன் அன்பைக் காப்போம், சிறந்த உறவு என்பது நம்மை சிரிக்க வைப்பது, சுற்றத்தாரே சுகமான சொந்தங்கள், பணம் சேர்ப்பது மிகவும் கடினம் செலவழிப்பது மிகவும் சுலபம், மகிழ்ச்சியின் இருப்பிடம் பாசத்தின் வளர்ப்பிடம், உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி குழந்தைகள் தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாகச் சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments