திருச்சி மாவட்டம் முசிறியில் மேலத்தெரு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் முன்னிட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து பூச்செரிதல் விழா, பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் முசிறி மேலத்தெரு ஸ்ரீமகா மாரியம்மன் கோவில் தேர் வீதி உலா நடைபெற்றது. இதில் மாரியம்மன் மலர்களால் அலங்கரித்த சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அமர்ந்து, நகரத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அது சமயம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தேரில் வலம் வந்த அம்மனுக்கு மாவிளக்கு போட்டு, தேங்காய் பழம் உடைத்து, தீபாரதனை காட்டி வழிபட்டனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விழா குழு கமிட்டியாளர்கள் முதன்மை சாமியாடிகள் காணியாளம் பிள்ளை செந்தில் குமார், பெரியாண்டவர்வேல் செந்தில் சிதம்பரம், அக்னி சட்டி சக்திவேல், அக்னி சட்டி சின்னப்பன், அக்னி கரகம் சக்திவேல், திருக்கோவில் நிர்வாகிஸ்தர் எம்.எஸ்.டி நடராஜர் சுந்தரம் பிள்ளை மற்றும் திருவிழா கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments