திருச்சியில் திரைப்பட நடிகர் விசுவிற்கு  புகழஞ்சலி நடத்திய அகில இந்திய தமிழ்ப் பேச்சாளர்கள் கூட்டமைப்பு

திருச்சியில் திரைப்பட நடிகர் விசுவிற்கு  புகழஞ்சலி நடத்திய அகில இந்திய தமிழ்ப் பேச்சாளர்கள் கூட்டமைப்பு

அரட்டை அரங்கம் விசு  என்றால் அறியாதவர்கள் யாருமில்லை.
 திரைப்பட இயக்குனர், கதையாசிரியர், தயாரிப்பாளர்,மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர் ,தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விசு. 
70க்கும் மேற்பட்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார்.


 சன் தொலைக்காட்சியில்அவர் தொகுத்து வழங்கிய  அரட்டை அரங்கம் 650 வாரங்களுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டது.
 தமிழகத்தில் பல பேச்சாளர்கள் உருவாக அம்மேடை  மிகப் பெரும் வாய்ப்பாக அமைந்தது. இந்நிகழ்ச்சியில் அளித்த நன்கொடை மூலமும் தன்னுடைய சொந்த செலவிலும்  ரூபாய் 10 கோடி அளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உதவியுள்ளார்.
 அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளானமார்ச் 22  நேற்று திருச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் அவருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


 இந்நிகழ்ச்சிக்கு அவரோடு உடன் இருந்த பேச்சாளர்களும் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி அமைப்பாளர்களும் கலந்துகொண்டனர்.
 இந்நிகழ்ச்சியை அகில இந்திய தமிழ்ப் பேச்சாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது. அமெரிக்காவில் வசிக்கும் விசுவின் குடும்பத்தார் மனைவி மற்றும் மகள்கள்  காணொளி வழியாக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சி குறித்து பேசிய அகில இந்திய தமிழ் பேச்சாளர்கள் கூட்டமைப்பின் செயலாளர் சிங்காரவேலு அவர்கள் , விசு நடிகர்  இயக்குனரையும் தாண்டி அவர் ஆகச் சிறந்த பேச்சாளர் .
அவரால் இன்றைக்கு தமிழகத்தின் பல பேச்சாளர்களை உருவாகிய பெருமைக்குரியவர்.


 அவரைப் பெருமைப் படுத்தவே அவரது  முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கான புகழஞ்சலி  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம் என்று முடிவு செய்து நேற்றைய தினம்  நிகழ்ச்சி நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழ் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU