கொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது அவசியமா? மக்கள் கருத்து

கொரோனா இரண்டாம் அலை... ஐபிஎல் போட்டிகள் தற்போது அவசியமா? மக்கள் கருத்து

சி.சோஃபியா பிரியதர்ஷினி
மாணவப்பத்திரிக்கையாளர்

ஏப்ரல் மே மாதங்கள் என்றாலே அது ஐபிஎல் திருவிழா என்று  உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வரும் ஆனால் கடந்த ஆண்டு கொரானா காரணமாக ரசிகர்களுக்கு இடமளிக்காமல் விளையாட்டு வீரர்கள் மட்டும்  மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

 இந்த ஆண்டும் அதே சூழலில்தான் காக்ரிகெட் நடைபெற்று வருகிறது ஆனால் கொரானா இந்தியாவில்   அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதால் இந்தியாவில்  விளையாட்டு போட்டிகள்  தேவைதானா என்ற கேள்வியும் ஒருபுறம் எழுந்திருக்கிறது.
 உங்கள் வீடுகளில் ஒருவருக்கு கொரானா  வந்திருந்தால்  ஐபிஎல் நடத்தவேண்டும் என்று கூறுவீர்களா  என்று ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம்  ஜாம்பா கேள்வி எழுப்பி உள்ளார் .
அதேசமயத்தில் BCCI  ஐபிஎல் போட்டியானது  மனித நேயம் மிக்க ஒரு செயலில் பயன்படுத்துவதற்காக நடத்தப்பட்டு வருகிறது என்றும் தங்களுடைய தரப்பில் பதிலளித்துள்ளனர்.

 இவ்வாறு காரசாரமான விவாதங்கள்  ஐபிஎல் பற்றி எழுந்தாலும் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது இது குறித்து மக்களின் கருத்தை திருச்சி விஷன் குழு அணுகியபோது அவர்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு,

 ஃபெல்ஷியா மீனாக்குமாரி
ஆசிரியர் 


கடந்த ஆண்டுகளில் எல்லாம் 
ஏப்ரல் மாதம்  பல்வேறு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும்,  அந்த நேரத்தில் கிரிக்கெட் நடைபெறும் போது மாணவர்கள் மதிப்பெண்கள் இழக்கும் நிலையில் கூட இருந்தனர் இப்பொழுது அனைவரும் வீடுகளில் உள்ளார்கள் வெளியில் சுற்றாமல் இருக்கவும் அவர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்க IPL உதவும் என்று கருதுகிறேன் என்கிறார் மீனாக்குமாரி.

பிரிய சுதர்ஷினி 
ஆசிரியர்


இந்தியாவில் கொரானா 
இரண்டாவது அலை  மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது இந்நிலையில் கிரிக்கெட் என்ற பெயரில் மக்களை திசை திருப்புவதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற ஒரு அரசியல்  போக்காக பார்க்கப்பட்டாலும்,  இந்த நேரத்தில் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகள் அவசியமற்றது என்று தான் நானும் கருதுகிறேன் என்கிறார் பிரியசுதர்ஷினி.


 
அஜய் 
கல்லூரி மாணவர்

கிரிக்கெட் பார்ப்பது நல்ல விஷயம் தான் ஆனால் இது போன்ற பேரிடர் காலத்தில்  அந்த பணத்தை மக்களுக்காக செலவிடலாம் அதைவிடுத்து விளையாட்டுப் போட்டிகளுக்கு இவ்வளவு பணத்தை செலவழித்து நம்முடைய நேரத்தை செலவழிப்பது அறிவீனம் என்றே கருதுகிறேன் என்கிறார் அஜய் 

 ஜோஷ்வா
பள்ளி மாணவர்

பள்ளியும் கிடையாது வெளியில் சென்று விளையாடும் வாய்ப்பு கிடையாது இது போன்ற நிலையில் ஐபிஎல் போட்டிகள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது அதுமட்டுமின்றி விளையாட்டு மைதானத்தில்  ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதில்லை அதுமட்டுமின்றி அங்கு விளையாடும் வீரர்கள் ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைமேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன என்பதால்ஐபிஎல் வேண்டும் என்று  என்கிறார் ஜோஷ்வா
 
தாளமுத்து
பேருந்து ஓட்டுநர் 


தொலைக்காட்சி செய்தித்தாள்  செல்போன் எல்லாவற்றிலும் கொரானா  பற்றிய செய்திகளை கேட்டு கேட்டு மன அழுத்தம் உண்டாகிறது, இதுபோன்ற நேரத்தில் ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகள் மனதிற்கு சிறிதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக  கூறுகிறார்  தாளமுத்து.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF