நாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் , தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு விதிகள் கொரோனா பரவலை கட்டுபடுத்த  பயனளிக்குமா ?

Apr 28, 2021 - 22:53
Apr 29, 2021 - 19:30
 397
நாள்தோறும் திருச்சியில் 400 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் வேளையில் , தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு விதிகள் கொரோனா பரவலை கட்டுபடுத்த  பயனளிக்குமா ?

ஷிஷ்மா ஷீலு 
மாணவப்பத்திரிக்கையாளர்.

இந்தியாவைப் பொருத்தவரை கொரோனா தொற்று  நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,
 இரவு நேரம் ஊரடங்கு  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்துகின்றன எனினும் கட்டுப்பாடுகள் பரவலை  கட்டுப்படுத்த பயன் அளிக்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது இக்கேள்வி குறித்து திருச்சி விஷன் குழு  மக்களே அணுகியது  பொதுமக்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு

ராஜு
பூ விற்பனையாளர் 

ஊரடங்கு மட்டுமே மக்களிடையே பரவலை கட்டுப்படுத்தாது சரியான மருத்துவ வசதிகள் வந்தால் மட்டுமே இந்நோயினை கட்டுப்படுத்த இயலும்.
ஊரடங்கு  பொது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்குமே தவிர 
நோயை தடுக்கும் எவ்விதத்திலும் உதவாது  என்கிறார் ராஜு.

அஜிஷ்

கப்பல் பணியாளர்

ஊரடங்குபோன்ற  கட்டுப்பாடுகள் மக்கள் விழிப்புணர்வு இன்றி நோய் பரவலை  கட்டுக்குள் கொண்டு வர இயலாது,
 முகக்கவசம் அணிவதனைக் கூட காவல்துறையினரின் மீதுள்ள பயத்தால் மட்டுமே அணிகின்றனரே   தவிர தங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை  என்று உணர்வதே இல்லை என்கிறார் அஜிஸ்.


 
ஜெயகௌரி
உதவிப்பேராசிரியர் 

கடந்த ஆண்டு தடுப்பூசி இல்லாமலேயே கொரோனா  போன்றவற்றை கட்டுப்படுத்த  அரசால் முடிந்தது இதற்கு காரணம் ஊரடங்கு மட்டுமே.
 மக்கள் அதனை சரியாக பயன்படுத்தினால் நோய்களை கட்டுப்படுத்தலாம் என்கிறார் ஜெயகௌரி

பேபிஷா 
கல்லூரி மாணவி.

பொதுமக்கள்  அதிக பொது இடங்களில் கூட்டம் கூடாமல்  இருந்தாலே   நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்படுத்த இயலும் எனவே தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மக்களுக்கு நோய்களை கட்டுபடுத்தும் என்றே கருதுகிறேன் என்கிறார் பேபிஷா.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF