ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மாணவர்களும் ஐடி ஊழியர்களின் எண்ண ஓட்டம் என்ன?

ஊரடங்கு காரணமாக பெங்களூருவில் இருந்து சொந்த ஊர் திரும்பும் மாணவர்களும் ஐடி ஊழியர்களின்  எண்ண ஓட்டம் என்ன?

பரபரப்பாக இயங்கும் நகரங்களில் கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரம் மிக முக்கியமான ஒரு நகரம் எப்பொழுதுமே.
பகல் இரவு வேறுபாடின்றி  பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்  கொரானா  காலகட்டம் என்பதால் கர்நாடக மாநிலம் முழுவதுமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் என்று எல்லோரும் தங்களுடைய சொந்த ஊர்  வந்துள்ளனர்.

 பரபரப்பாக இயங்கிய மாநகரில் இருந்து  சொந்த ஊருக்கு வந்தவர்கள்  எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை அவர்களிடமே கேட்டு அறிந்த போது அவர்கள் கூறிய பதில்கள் இக்கட்டுரையில் காண்போம்.

ராஜேஷ் நடராஜன்
தனியார் நிறுவன ஊழியர்.

பெங்களூரை பொருத்தவரை எப்போதுமே நம்மை உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடன் நேர்மறை எண்ணங்களுடன் நம்மை பயணிக்க உதவும் ஒரு பரபரப்பான நகரம் தான் தற்போது இந்த கொரானா காலகட்டம்  என்பதால் நான் திருச்சி வந்து  ஒன்றரை வருடங்கள் ஆகின்றது.

 அந்த பரபரப்பும் இல்லாமல் தான் பணியாற்றி கொண்டிருக்கிறோம். கர்நாடகாவை பொருத்தவரை ஊரடங்கு விதிமுறைகள் மிகவும் சரியான முறையில் பின்பற்றப்படும் மக்கள் இரண்டு கிலோமீட்டர் தானே என்று வாகனங்களை பயன்படுத்த இயலாது.
 மிதிவண்டிகளை எடுத்துக்கொள்ளலாம்   அல்லது நடந்து சென்றுதான் பொருட்கள் வாங்கும் நிலை சராசரியாக தங்களுடைய விதிகளை பின்பற்றும் விதத்தில் மக்களையும் அவர்கள் கையாண்டு கொண்டிருக்கின்றன மிக விரைவில்  முடிந்து பரப்பரப்பான நகரில் மீண்டும் பயணிக்க ஆசை கொள்கிறேன் என்கிறார் ராஜேஷ்.

மது
 கல்லூரி மாணவி 


கல்லூரி, வேலை எல்லாவற்றிற்குமே பெங்களூரு சிறப்பான நகரம்தான் அதனால்தான் என்னுடைய முதுகலைப் படிப்பை  பெங்களூரில் தொடர்ந்தேன் தற்போது கொரானா  கால கட்டம் என்பதால் கர்நாடகாவில் ஊரடங்கு அமல் படுத்தியதால்  தற்போது வீட்டிலிருந்து ஆன்லைன்  வகுப்புகளில் 
கற்றுக் கொண்டிருக்கிறோம் பரபரப்பான நகரம்  தற்பொழுதும் அவர்கள் விதி முறைகளையும்  மீறி ஊரடங்கு என்றும்  கண்டு கொள்ளாமல் அலைந்து திரிந்து கொண்டுதானிருக்கின்றன ஊரடங்கு  பொறுத்தமட்டில் தமிழகமே சிறந்தது என்று எனக்கு தோன்றுகிறது என்கிறார்.


  
அனுஷா ராஜேஷ்
இல்லத்தரசி

என்னுடைய மகன் ராகுல் பெங்களூரில்  படித்துக்கொண்டிருக்கிறான்   ஆறாம் வகுப்பிலிருந்து தற்போது ஏழாம் வகுப்பு செல்ல  இருக்கிறான்  குறிப்பாக என் மகன் படிக்கும் பள்ளியில்,
ஒரு பள்ளியில் மாணவன் எப்படி சரியாக செயல்படுவதற்கான   கால அட்டவணையை தான் என் மகன் வீட்டிலும் பின்பற்றி படித்துக் கொண்டிருக்கிறார்.
 இதனால் அவனுடைய கல்வி எவ்விதத்திலும் பாதிக்காது என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழகத்திலும் பள்ளிகள் பள்ளி மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க அவர்களை சரியான முறையில் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்றும் கூறுகிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF