முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன?

முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன?

சி.சோஃபியா பிரியதர்ஷினி

மாணவ பத்திரிக்கையாளர்.

முக கவசம் அணியாதவர்களிடம்   அதிக அளவில் அபராதம் என்ற பெயரில் பணம் வசுலிக்கப்படுவதாக மக்களிடையே ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதனை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்டறிய திருச்சி விஷன் குழு மக்களை அணுகியது மக்கள் அளித்த பதில்கள் சிலவற்றை இங்கு காணலாம்.
 மரகதம் 
பூ விற்பவர்.

கடந்த வருடமேகொரானா  காரணத்தால்  என் வீட்டில் இருந்த அனைத்து நகைகளை அடகு வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தோம்.
 இன்றைக்கு கொரானா ஒரு பக்கம் விரட்டி கொண்டிருக்க பசிக்கொடுமை இன்னொரு பக்கம் விரட்டிக் கொண்டிருக்கிறது.
 இதற்கிடையில் அபராதம் என்ற பெயரில் இவர்கள் மக்களை சுரண்டி சாப்பிடுவதற்கு சமமாக இருக்கிறது.
 நோய் பற்றிய பயத்தை விட பசி பற்றிய பயமே இங்கு பல மனிதனை அழித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார் மரகதம். 

கவிதா 
இல்லத்தரசி.

முக கவசம் அணிதல் எங்களின் பாதுகாப்புக்கான ஒரு செயலாக இருந்தாலும், மறதியாக எப்போதாவது வருபவர்களுக்கு  கூட அதிக அபராதம் விதிக்கின்றனர்.
  அவர்களுடைய பொருளாதார சூழ்நிலை அறிந்து கொள்ளாமல் அபராதம் என்ற பெயரில் அதிக அளவு கட்டணம் வசூலிப்பது மக்களை இன்னும் பாதிப்புக்குள்ளாக்கும்.
 அதுமட்டுமின்றி அரசின் மீது அவநம்பிக்கையும் உண்டாகும்.
 எனவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர மக்களை வரி என்ற பெயரில் பாதிப்புக்குள்ளாக்குவது அரசின் கடமையாக கருதப்படாது என்று கூறுகிறார் கவிதா. 

நரேஷ் பாபு.
கல்லூரி மாணவர்

தண்டனைகள் அதிகமாகும்போது தவறுகள் குறையும் எனவே நம்முடைய பாதுகாப்புக்காக அரசு செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் நம்முடைய பாதுகாப்புக்காக என மக்கள் நம்பவேண்டும் அதுமட்டுமின்றி  நம்முடைய கடமையை சரியாக செய்து விட்டால் எதற்காக அபராதம்  விதிக்க போகிறார்கள் எனவே நாம் சரியாக நடந்து கொண்டாலே தவறுகளும், தண்டனைகளும் இல்லாமல் போய்விடும் என்கிறார் நரேஷ் பாபு.

பால் அருள் குமார் 
பள்ளி தலைமை ஆசிரியர்.

முகக் கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல் எல்லாமே மக்களின் நலனுக்காக தான் ஆனால், அதற்காக 500 வரை அபராதம் விதிக்கப்படுவது வந்து மிகப்பெரும் கண்டிக்கத்தக்க செயல்.
  முகக் கவசம் அணியாதவர்களுக்கு தண்டனையாக  ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் காத்திருக்க செய்யலாம் மீண்டும் மீண்டும் அதையே செய்தால் ஏன் ஒரு அரை நாள் கூட அங்கேயே நிற்க செய்யலாம் அல்லது அமரச் செய்யலாம் ஆனால் அதிக பணம்  அபராதம் விதித்தல் தண்டனை அளித்தல் என்பது தவறான செயலாக கருதுகிறேன் என்கிறார்.


திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu