கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதுமட்டுமின்றி எளிதாக தடுப்பூசி போட்டு கொள்ள முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் திருச்சியில் கடந்த 3 நாட்கள் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை. இதனை தொடர்ந்து இன்று மாநகராட்சிக்குட்பட்ட ஶ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை, கோ-அபிஷேகபுரம் ஆகிய கோட்டங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக திருச்சி நவல்பட்டில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இங்கு வந்த ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நடைபெறும் தடுப்பூசி முகாமில் கொரோனா தொற்று பரவுவதற்கு பொதுமக்களின் செயல்பாடு காரணமாக அமைவதாக சமூக ஆர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS







Comments