திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் சட்டவிரோதமாக தமிழகத்தில் குடியேறிய மற்றும் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்த மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் நைஜீரியா மற்றும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டதால் மற்ற வெளிநாட்டு கைதிகளுக்கும் உயிருக்கு அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பு கைதிகளிடமும் நள்ளிரவில் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
கைதிகள் மோதல் சம்பவத்தால் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
சிறப்பு முகாம் கதவுகளை உடைத்துக் கொண்டு, வெளியே தப்பியோட முயன்ற, வெளிநாட்டினர் 6 பேர் கைது.
அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின்னர், அவர்களை புழல் சிறைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments