தாய்த் திருநாட்டின் 78வது சுதந்திரத் திருநாள் கொடியேற்று விழா இன்று திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்சி நகர சரக வட்டாரக்கல்வி அலுவலர் அ.ஜோசப் அந்தோணி தலைமை வகித்தார்.


பள்ளியில் முதல் வகுப்பு பயிலும் மாணவர் எம்.ஆதி தேசிய கொடி ஏற்றி சிறப்பு செய்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் துணைத் தலைவர் டி. சரவணன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


பள்ளி மாணவர்கள் மகாத்மா காந்தி, நேரு, பகத்சிங் ஜான்சி ராணி லட்சுமி பாய், பாரதியார் உட்பட மாறுவேடமிட்டு வந்து அசத்தினர். பேச்சு, கவிதை, நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மோகனா, உமா, சகாயராணி, மேரி செரொபியா, சீதாலட்சுமி, குலாஃப்சா ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர். ஆசிரியை சரண்யா நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments