திருச்சி மாநகர காவல்துறை சார்பில்  மினி மாரத்தான் போட்டி ஆட்சியர்,ஆணையர் பங்கேற்பு

திருச்சி மாநகர காவல்துறை சார்பில்  மினி மாரத்தான் போட்டி ஆட்சியர்,ஆணையர் பங்கேற்பு

திருச்சிராப்பள்ளி மாநகரில் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு சாலையில் பயணம் செய்தவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் தலைக்கவசம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மராத்தான் போட்டி நடத்தப்பட்டது.


சாலை பாதுகாப்பில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நடந்த மராத்தான் போட்டி திருச்சி  தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் இருந்து புறப்பட்டு எம்ஜிஆர் சிலை ரவுண்டானா ,பாரதிதாசன் சாலை, தலைமை தபால் நிலைய ரவுண்டானா, புதுக்கோட்டை ரோடு, டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் அமைந்துள்ள ரவுண்டானா வரை 5 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை தாங்கினார்.  திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் ,ஆட்சியர் சிவராசும் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொள்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆட்சியர்,காவல் ஆணையர் இருவரும் 5 கிலோமீட்டர் தூரம் ஓடி  நிறைவு செய்தார்கள்.


இப்போட்டியில் திருச்சி மாநகராட்சி ஆணையர் திரு சுப்பிரமணியன் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு பவன்குமார் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் குற்றம் மற்றும் போக்குவரத்து வேதரத்தினம் மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் திருச்சி மாநகர காவல் துறை சார்பாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இப்போட்டியில் பெண்கள் பிரிவில் முதல் பரிசு தஞ்சாவூரை சேர்ந்த செல்வி ரேணுகா இரண்டாம் பரிசு தஞ்சாவூரை சேர்ந்த செல்வி அஞ்சலி மூன்றாம் பரிசு திருச்சியைச் சேர்ந்த செல்வி கவிதா நான்காம் பரிசு திருச்சியை சேர்ந்த செல்வி மேனகா ஐந்தாம் பரிசு திருச்சியை சேர்ந்த செல்வி வினோதா ஆரம்பித்து திருச்சியை சேர்ந்த செல்வி லோசினி ஆகியோர் களுக்கும் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு தஞ்சாவூரை சேர்ந்த சரவணன் இரண்டாம் பரிசு திருச்சி பெட்டவாய்த்தலை சேர்ந்த குணால் மூன்றாம் பரிசு தஞ்சாவூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் நான்காம் பரிசு திருச்சியை சேர்ந்த ரவிவர்மா ஐந்தாம் பரிசு திருச்சி நகரை சேர்ந்த விசுவநாதன் ஆரம்பித்து திருச்சி தோட்டத்தை சேர்ந்த மோகன் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்தவர்களுக்கு விழா சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கோப்பையை வழங்கி பாராட்டினார் மேலும் இப்போட்டி சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்,நீயூரோ ஒன் மருத்துவமனை,டி.ஜே ஆட்டோமொபைல்ஸ், பிரணவ் ஜுவல்லர்ஸ் என்ஆர் ஐஏஎஸ் அகாடமி, சூரியன் எஃப்எம், நடுவர்கள் மற்றும் ப்ளேஸ்  நடன குழு ஆகியோருக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM