திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகள் நகராட்சி பேரூராட்சிகளில் உள்ள 398 வார்டுகளில் நேற்று(19.02.2022) வாக்குப்பதிவு நடைபெற்றது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் இறுதி நிலவரப்படி 61.36 சதவீத வாக்குகள் பதிவவாகியுள்ளது.
திருச்சி மாவட்ட மொத்தம் 10,62,590 வாக்காளர்கள் உள்ளனர்.
ஆண் வாக்காளர்கள் : 5,13,177
பெண் வாக்காளர்கள் : 5,49,225 திருநங்கைகள். : 188
பதிவான வாக்குகள் நிலவரம் – 6,52,044
ஆண்கள் : 3,20,038
பெண்கள். : 3,31,966
திருநங்கைகள் : 40


வாக்குப்பதிவு சதவீதம் : 61.36%
மாநகராட்சி : 57.25%
நகராட்சி : 70.44%
பேரூராட்சி : 74.87%
திருச்சி மாவட்டத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமானோர் வாக்களித்துள்ளனர்.
188 திருநங்கைகளுக்கு 40 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் ஆய்வு செய்து வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார் ஆகியோர் உடனிந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn






Comments