அன்னை தெரசா பிறந்த நாளை முன்னிட்டு கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) வேதியல் துறை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு இணைந்து திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியிலுள்ள சேவாசங்கம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவுகள், பழங்கள் மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் தேவராசு சீனிவாசன் வழிகாட்டுதல்படி எங்கள் மாணவர்கள் அந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பலவிதமான விழிப்புணர்வு விளையாட்டுகளை நடத்தி பரிசுகளை வழங்கினார்கள்.

இன்றைய சூழலில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதில் அவசியத்தைப் பற்றியும், மரங்கள் நடுவதை முக்கியத்துவம் பற்றியும் எங்கள் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments