தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை குருபூஜையாக அனுசரிக்கப்படுகிறது.
இதற்காக, திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் திருஉருவப்படத்திற்கு, பொதுமக்கள், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலைகள் அணிவித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குறிப்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்சி சார்பற்ற இளைஞர் ஆட்டோ ஓட்டுநர் பர்னாபாஸ் தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதே போன்று பீமநகர், உறையூர், தில்லை நகர், பாலக்கரை, கே.கே.நகர், மற்றும் திருவானைக்காவல் சன்னதி வீதியில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
எவ்வித எதிர்பார்ப்புமின்றி பெரிய பின்புலமும் இன்றி, விஜயகாந்துடைய உண்மையான ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் தங்களது சொந்த செலவில் வழங்கிய அன்னதானம் காரணமாக, திருச்சியில் திரும்பிய பக்கம் எல்லாம் ஏழை எளிய மக்கள் பசியாறுவதை காண முடிந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments