திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு எம் பி பி எஸ் மாணவர்களுக்கான துவக்க விழா நடைபெற்றது. விழாவில் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கோப குமரன் கர்த்தா வரவேற்புரை ஆற்றினார் தொடர்ந்து எஸ் ஆர் எம் திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகத்தின் தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமையேற்று தலைமை உரை ஆற்றினார்.
மேலும் விழாவில் திருச்சி வளாகத்தின் சார்பு துணை வேந்தர் டாக்டர் சம்ருதீன் கான் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தின் முதன்மை இயக்குனர் டாக்டர் சேதுராமன் திருச்சி வளாகத்தின் துணை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். விழாவின் முக்கிய அங்கமாக புதிதாக சேர்ந்த 250 மாணவர்களுக்கு ஒயிட் கோட் செரிமனி நடை நடைபெற்றதை அவர்தம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மனதார கண்டு களித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments