தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை ‌

தந்தை கண்டித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை ‌

Advertisement

திருச்சி திருவானைக்கோவில் பொன்னுரங்கபுரத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவருடைய மகன் ராகுல்(19) ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.

Advertisement

கல்லூரிக்கு செல்லாமல் தினமும் நண்பர்களுடன் விளையாட சென்றுள்ளதால் நேற்றுமுன்தினம் இரவு ராகுலை தந்தை கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த ராகுல் இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.