திருவெறும்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடத்தியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. திருவெறும்பூர் தென்பகுதிக்கு நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலை சூரியூர் காந்தளூர்
கீரனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் நவல்பட்டு சாலை கடந்த சில வருடங்களாக மாநகராட்சி பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு திருவெறும்பூர் மெயின் ரோட்டில் இருந்து செல்வபுரம் இரயில்வே கேட் வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு 50க்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளமும் குண்டும் குழியுமாக சாலை
இருப்பதால் இதில் செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் விழுந்து எழுந்து காயம் படும் அபாயநிலை தொடர்ந்து இருந்து வருகிறது அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இது பற்றி நெடுஞ்சாலைத்துறை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கு தொடர்ந்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர் இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று நவல்பட்டு சாலையில் படுத்து உருளும் போராட்டம்
அறிவித்திருந்தனர் ஆனால் அரசு நிர்வாகம் இதுகுறித்து எந்த அமைதி பேச்சு வார்த்தையும் இன்று காலை வரை நடத்தாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவெறும்பூர் கடைவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு நவல்பட்டு சாலை வந்து சாலையில் படுத்து உருளும் போராட்டம் நடத்தினர் போராட்டத்திற்கு கக்கன் காலனி கிளை செயலாளர் பி நாகூர் மைதீன், செல்வபுரம் கிளை செயலாளர் பி ஜெயச்சந்திரன்
காந்திநகர் கிளைச் செயலாளர் ஆர். லாரன்ஸ், நேதாஜி நகர் கிளைச் செயலாளர் டி சந்தோஷ் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.இதில் கட்சியின் மாவட்ட செயற்குழுவை சேர்ந்த ஆர் ராஜா, பகுதிக்குழுச் செயலாளர் எம். மணிமாறன், தமிழ்நாடு விவசாய சங்கம் கே.சி.பாண்டியன், பகுதி குழு கே. ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு நவல்பட்டு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் கக்கன் காலனி காந்தி நகர் சுருளி கோவில் தெரு
காமராஜர் நகர், செல்வபுரம் நேதாஜி நகர் பகுதிகளில் புதிய சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும் நேதாஜி நகர் பகுதியில் குடிநீர் சாக்கடை வசதி மின் வசதி உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் சுற்றி தெரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் கக்கன் காலனி காந்தி நகர்
பகுதிகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்பகுதி 41வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் ஏரியாவுக்கு வருவது இல்லை இப்பகுதியைப் பற்றி எதுவும் கண்டு கொள்வதில்லை காணாமல் போய்விட்டார் என்றும் குற்றம் சாட்டி பேசினர் இதில் ஏராளமான கட்சியினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments