Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – கையெழுத்து இயக்கம்

No image available

திருச்சி அரசு மருத்துவமனையின் அவலம் போக்க ஒன்றிணைவோம்!மருத்துவமனை தரம் உயர்த்திட கைகோர்ப்போம்!!என்ற முழக்கத்துடன் ஜீலை 13 முதல் ஜீலை 20 வரை திருச்சி மாவட்டம் முழுவதும் பொதுமக்களைச் சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி பெற்ற மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 21.07.2025 மனு கொடுக்கும் இயக்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மேற்குப் பகுதிக்குட்பட்ட தென்னூர் ஸ்டூடண்ட் சாலை, உழவர் சந்தை,தென்னூர் அரசமர பஸ் ஸ்டாப் உள்ளிட்ட இடங்களிலும்,உறையூர் பாக்குப்பேட்டை, பாண்டமங்கல், கருமண்டபம் பொன்னகர் உள்ளிட்ட இடங்களிலும் இன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதில் பகுதி செயலாளர் M.I.ரபீக் அஹமது தலைமை வகித்தார். மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் S.ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் G.வெற்றிச்செல்வன் பகுதிக்குழு உறுப்பினர்கள் A.ஷேக் மொய்தீன், கிளை செயலாளர் S.முருகன் மற்றும் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்:

தமிழகத்தின் மையப் பகுதியில் பல்வேறு மாவட்ட ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையின் புகழிடமாக உள்ளது திருச்சி அரசு மருத்துவமனை.

1. டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களின் காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் நோயாளிகள் பெரும் அவதி.

2. நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் 3 ஷிப்டுகளிலும் பணியில் இருப்பதை உறுதிசெய்.

3. நோயாளிகளுக்கு குடிநீர், சுடுநீர், தரமான உணவு வழங்குவதை உறுதிசெய்.

4. சுகாதாரத்தை மேம்படுத்திடு, கழிவறைகளுக்கு போதிய தண்ணீர் வசதி செய்து கொடு.

5. விரைவான மருத்துவம், அறுவை சிகிச்சை, எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட சேவைகளை உடனே வழங்கிடு.

6. நவீன மருத்துவ பிரிவுகளை உருவாக்கிடு, நோயாளிகளின் பாதிப்பிற்குண்டான நவீன மருந்துகளை வழங்கிடு.

7. ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை காலி பணியிடங்களை நிரப்பி தரம் உயர்த்து.

8. மருத்துவமனையில் நடைபெறும் இலஞ்சம், லாவணியத்தை ஒழித்திடு

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *