ஆகஸ்ட் 18 மாநில மாநாடு பேரணி சம்பந்தமாக கிளை வாரியாக பேரணியில் கலந்து கொள்ளும் தோழர்கள் எண்ணிக்கையை பகுதி செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி தலைமையில் பேரணியில் கலந்து கொள்ளும் எண்ணிக்கையை உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு பஸ், ஒரு மினி வேன் என்ற அடிப்படையில் முயற்சி செய்வது என முடிவெடுக்கப்பட்டது. பேரணி குறித்தும் அதன் அவசியம் குறித்தும் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் விளக்கி கூறினார்.
திருவரங்கம் வடக்கு வாசல் கோயில் குடியிருப்பு மற்றும் கடைகளை அகற்றியதற்காக நியாயம் கேட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் A.சண்முகம் மீது இந்து சமய அறநிலைத்துறையினர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில் மேற்கு பகுதி பொருளாளர் க. முருகன் நிர்வாக குழு உறுப்பினர்கள் க. ஆயிஷா, M. சுமதி, பகுதிக்குழு உறுப்பினர்கள் R.சரண்சிங், S.மௌலானா, வை.புஷ்பம், தில்லை K.நாகராஜ், R.சீனிவாசன், P.காந்தி, N.ராமச்சந்திரன், S.ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments