சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மண்ணச்சநல்லூர் பேரூராட்சி சமுதாய கூடத்தில் (24. 02.2025) அன்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி தலைவர் எஸ். கண்ணூர் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்ட திட்ட அலுவலர் மா. நித்யா மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மண்ணச்சநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாலையிட்டு மஞ்சள் குங்குமம் கொடுத்து வளையல் அணிவித்தனர்.விழாவில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு பூ,பழம் ஜாக்கெட் துணி, வளையல் மஞ்சள்,குங்குமம்,பேரிச்சம்பழம் உள்ளிட்ட சீர்வரிசை தட்டுக்கள்
வழங்கப்பட்டன. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஐந்து வகை கலவை சாதத்துடன் மத்திய உணவு அளிக்கப்பட்டது. இவ்விழா மண்ணச்சநல்லூர் வட்டாரத்தின் சார்பாக மண்ணச்சநல்லூர் வட்டார குழந்தை வளர்ச்சி நல அலுவலர் திருமதி வசந்தி ஏற்பாடு செய்திருந்தார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய
https://www.threads.net/@trichy_vision
Comments