Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அரிசி மில்லின் அடைத்து வைத்துள்ள லாரியை மீட்டுத்தரக்கோரி புகார்

தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர், திருச்சி காவல்துறை மண்டலத் தலைவர்  காவல்துறை துணைத் தலைவர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருச்சி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி &  திருச்சி மக்கள் தொடர்பு அதிகாரி  இந்தப் பதிவில்

கடந்த 09/06/2025ல்,  திருச்சி மாவட்ட புலிவலம் பகுதியில் உள்ள Hi Tech Agro Food pvt Ltd இருந்து அரிசி ஏற்றிக் கொண்டு பாண்டிச்சேரிக்கு சென்றது. அப்போது அந்த மில்லில் ஆய்வு செய்த போது தரம் இல்லா அரிசி என்று கூறப்பட்டதால், லாரியை ஒட்டிச் சென்ற டிரைவர் அவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கூறிய பிறகும், மேலும் நான் சொல்லும் காரைக்கால் மில்லில் அரிசி லோடை இறக்கி விட்டு வாருங்கள் என்று கூறியதால், அதற்கும் லாரிக்குரிய வாடகையை தருகிறோம் என்று கூறியதால்

 லாரி டிரைவர் காரைக்காலுக்கும் சென்றார், அங்கும் தரம் இல்லா அரிசி வேண்டாம் என்று கூறியதால், சம்பந்தப்பட்ட புலிவலம் மில் மேலாளர் அரிசி லோடை திருப்பி வாருங்கள் என்று கூறியதால் சம்பந்தப்பட்ட அரிசி லோடு ஏற்றிய பகுதிக்கு வந்து அரிசியை இறக்கி உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட மில் மேலாளர் அரிசி லோடு நனைந்து உள்ளதால் அதற்கு உரிய நஷ்ட ஈடு கொடுத்து விட்டு உன் லாரியை எடுத்துச் செல் என்று கூறியுள்ளார்.

 அதற்கு லாரி டிரைவர் அந்தப் பகுதியில் மழை பெய்ததால் அரிசியில் லோடு நனைந்து இருக்கலாம் , அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது, மேலும் தங்கள் மில் நிறுவனம் தரம் இல்லா அரிசியை ஏற்றி விட்டது முதலில் உங்களுடைய முதல் தவறாகும், மேலும் தங்கள் மில்லில் உள்ள வேலை செய்யும் லோடு மேன்கள் தான் தார்பாய் கட்டினார்கள், மேலும் லாரி டிரைவர் ஆகிய நான் பொறுப்பேற்க முடியாது, தாங்கள் கூறிய படி

 உரிய வாடகையையும், வாடகைக்கு ஓடிய லாரியையும் வெளியே விடுங்கள் என்று டிரைவர் கூறியும் மில் மேலாளர் அவர்கள் அடியாட்களை வைத்து லாரி டிரைவரை மிரட்டி, லாரியை அபகரித்து மில்லின் ஒரு பகுதியில் அடைத்து வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளர் புலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார் ஆகையால் இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு தரம் இல்லா அரிசியை உற்பத்தி செய்த புலிவலத்தில்

 உள்ள Hi Tech Agro Food pvt Ltd நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். மேலும்* *இந்தப் பதிவில் Hi Tech Agro Food Pvt Ltdயை குறை கூறவில்லை, விமர்சிக்கவும் இல்லை, மேலும் தரம் இல்லா அரிசியை உற்பத்தி செய்வதை நிறுத்தியும், மில்லில் உள்ள லாரி உரிமையாளர் வண்டியை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.மேலும் லாரி உரிமையாளர் புலிவலம் காவல் நிலையத்தில் புகார் மனுவை பதிவில் போடப்பட்டுள்ளது.லாரி உரிமையாளர் கல்பனா & டிரைவர் சார்பாகவும், பொதுநலன் கருதி T.ரவிச்சந்திரன் M.Sc.,B.Ed.,BL., வழக்கறிஞர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *