Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தோழர் நல்லகண்ணு மறைவு: திருச்சியில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற பிரம்மாண்ட மௌன அஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தகைசால் தமிழர் விருது பெற்றவருமான தோழர் இரா.நல்லகண்ணு தனது 101 வது வயதில் வயதுமுதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்.


தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அனைத்துக் கட்சி சார்பில் மௌன அஞ்சலி மற்றும் இரங்கல் நிகழ்ச்சி இன்று திருச்சியில் நடைபெற்றது. புத்தூர் நால்ரோட்டில் இருந்து தொடங்கிய மௌன அஞ்சலி ஊர்வலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ஆம்ஆத்மி, மனிதநேய மக்கள் கட்சி, திமுக மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் மௌன அஞ்சலி ஊர்வலத்தில்பங்கேற்றுசென்று, பின்னர் உறையூர் குறத்தெருவில்

நடைபெற்ற இரங்கல் கூட்டத்திலும் பங்கேற்று தோழர் நல்லகண்ணு அவர்களின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *