திருச்சி ரேஷன் கடைகளில் விநியோகத்திற்கு வரும் செறிவூட்டப்பட்ட அரிசி - ஆட்சியர் தகவல்!!
திருச்சி மாவட்டத்தில் பொதுவினியோக ரேஷன் கடைகள் 1774 உள்ளது. இந்த ரேஷன் கார்டுகள் 8,19,771 பேர் பொது வினியோக திட்டம் மூலம் பயன் பெறுகிறார்கள்.இதில் மாதந்தோறும் 7,90,855 பேர் அரிசி வாங்கி வருபவர்கள். இவர்களுக்கு 15 ஆயிரம் டன் அரிசி ஒரு மாதத்திற்க்கு தேவைபடுகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் மாதம் 15 ஆயிரம் டன் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பதற்காக ஆலைகளில் இருந்து மூட்டைகளாக தயராகி வருகிறது. அரிசியில் இரும்புச்சத்து ,போலிக் அமிலம், பி12 விட்டமின் ஆகியவை உள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசியை சாதாரணமாக அரிசி மூட்டையில் 100 கிலோ பையில் ஒரு கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியை கலந்து பொது மக்களுக்கு விநியோகிக்க உள்ளனர்.
இந்த அரிசியை உண்பதால் மூலம் இரத்த சோகை மற்றும் வைட்டமின் குறைபாடுகள் நீங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக செறிவூட்டப்பட்ட அரிசியை ஒரு சதவீதம் அரிசி மூட்டைகளில் கலப்பதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். 01.10. 2020 முதல் திருச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.