காவிரி பாலத்தின் தரமற்ற சாலையை கண்டித்து சாக்கு போட்டி நடத்தி போராட்டம்!

காவிரி பாலத்தின் தரமற்ற சாலையை கண்டித்து சாக்கு போட்டி நடத்தி போராட்டம்!

திருச்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காவிரி பாலத்தின் அவலநிலையை கண்டித்து சாக்கு போட்டி நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் DYFI சங்கத்தினர்.

ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் தினந்தோறும் அதிகமான விபத்துகள் நடைபெறுவதாலும், கர்ப்பிணிப் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் வாகனத்தில் செல்லும்போது காவிரி பாலத்தின் இடையே அபாயகரமான பள்ளத்தையும், அவசர நோயாளிகள் பாலத்தை கடக்கும் போது உயிர் பிரியும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளதை கண்டித்து DYFI அமைப்பினர் சாக்கு போட்டி நடத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இதில் DYFI மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் எஸ் சுரேஷ், பா.லெனின், ஸ்ரீரங்கம் பகுதி DYFI அமைப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement